வெளிநாட்டு படையை நாட்டிற்குள் அனுமதிக்கமாட்டேன்!

வெளிநாட்டு படையை நாட்டிற்குள் அனுமதிக்கமாட்டேன்!

தாம் பதவியில் இருக்கும் வரை வெளிநாட்டு படைகளை நாட்டுக்குள் வர இடமளிக்கப் போவதில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் உயிர்த்த ஞாயிறு அன்று இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதல்களை தொடர்ந்து வெளிநாட்டு படைகள் இலங்கைகுள் வர முயற்சிப்பதாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் அஸ்கிரிய, மல்வத்து மகாநாயக்கர்கள் மற்றும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஆகியோர் இணைந்து வெளிநாட்டு படையினரை இலங்கைக்குள் வர அனுமதிக்க வேண்டாம் என்று நேற்றைய தினம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு இன்று கருத்து தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net