இலங்கைக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க தயார்!

இலங்கைக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க தயார்!

எதிர்காலத்தில் இலங்கைக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக உள்ளதாக இரண்டாவது தடவையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கிடையிலான சந்திப்பு புதுடில்லியிலுள்ள ஹைதராபாத் இல்லத்தில் இடம்பெற்றது.

இந்த சந்திப்பின் போதே நரேந்திர மோடி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அண்மையில் இலங்கை முகங்கொடுக்க நேர்ந்த துரதிஷ்டவசமான தாக்குதல் குறித்து இந்திய பிரதமர் வருத்தம் தெரிவித்தார்.

சமாதானம் மற்றும் அபிவிருத்தி தொடர்பில் இருநாடுகளுக்குமிடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துதல் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடினர்.

பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காகவும் பிராந்தியத்தில் சமாதானத்தை நிலைநாட்டுவதற்காகவும் ஒன்றிணைந்து செயற்பட அரச தலைவர்கள் இதன்போது உறுதிபூண்டனர்.

எதிர்வரும் ஆட்சிக்காலத்தில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான தொடர்புகள் மேலும் பலப்படுத்தப்படும் என தான் நம்புவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net