காட்டிற்கு தேன் எடுக்க சென்றவருக்கு ஏற்பட்ட சோகம்!

காட்டிற்கு தேன் எடுக்க சென்றவருக்கு ஏற்பட்ட சோகம்!

வவுனியா அட்டமஸ்கட பகுதியில் கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியா அட்டமஸ்கட பகுதியிலுள்ள காட்டுப்பகுதிக்கு தேன் எடுப்பதற்காக இன்று காலை 6மணியளவில் சென்ற குடும்பஸ்தர் விலங்கு வேட்டையாடுவதற்காக வைக்கப்பட்டிருந்த கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் அப்பகுதியைச் சேர்ந்த 64 வயதுடையவர் படுகாயத்திற்குள்ளாகி வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றார்.

இச்சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து அவ் இடத்திற்கு விரைந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Copyright © 6687 Mukadu · All rights reserved · designed by Speed IT net