ஞானசார தேரர் அனைத்து தலைவர்களுக்கும் விசேட அறிவிப்பு.

ஞானசார தேரர் அனைத்து தலைவர்களுக்கும் விசேட அறிவிப்பு.

அமைப்புகள், பிக்குமார் அங்காங்கே தனித்து போராட்டங்களை நடத்தாது, உண்மையில், நாட்டை நேசிப்பவர்களாக இருந்தால், தேசிய அமைப்பில் இணைய வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

சகல பௌத்த பீடகங்களும் ஒன்றாக நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தில் இணைய வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டம் என்ற தலைப்பிலான யோசனைகள் அடங்கிய கடிதத்தை பேராதனை கெட்டம்பே ராஜோபவனாராமய விகாராதிபதி கெப்பட்டியாகொட சிறிவிமல தேரரிடம் நேற்று கையளித்த பின்னர், செய்தியாளர்களிடம் பேசும் போதே ஞானசார தேரர் இதனை கூறியுள்ளார்.

சிங்கள அரசியல்வாதிகள் யார் ஊடாக கறுப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்றுகின்றனர் என்பதை கண்டறிய வேண்டும். எமக்கு தெரியும்.

ஆரம்பத்திலேயே எச்சரிப்பது அவசியம். இந்த தேசிய பிரச்சினை குறித்து கவனம் செலுத்தாவிட்டால், அவர்களின் பெயர் விபரங்களை வெளியிடுவோம்.

அடிப்படைவாதிகளிடம் அல் டக்கியா என்ற ஒன்றுள்ளது. தமது நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக எவரையும் ஏமாற்றுவதே அல் டக்கியா என்பதாகும்.

நாட்டின் அனைத்து தலைவர்களும் இந்த அல் டக்கியாவில் சிக்கியுள்ளனர் என்பதை நான் பொறுப்புடன் கூறுகிறேன்.

இந்த இடத்தில் இருந்து நாம் விடுபடவில்லை என்றால், வரலாற்றில் மீண்டும் திருத்த முடியாத தவறை செய்தோம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். என்னை நாளை சிறையில் அடைத்தாலும் பரவாயில்லை.

இதனை நான் வெளிப்படுத்தவில்லை என்றால், எமது கல்லறைகளிலும் இடி விழும் என ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net