தென்னிலங்கையில் துப்பாக்கி பிரயோகம் : ஒருவர் சுட்டுக்கொலை!

பொலிஸாருக்கும் மர்மநபருக்கும் இடையில் துப்பாக்கி பிரயோகம் : ஒருவர் சுட்டுக்கொலை!

தென்னிலங்கையில் பொருஸாருக்கும் சந்தேகநபருக்கும் இடையில் ஏற்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த சந்தேக நபரே இவ்வாறு இன்று அதிகாலையில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

அக்ரெஸ்ஸ, ஊருபொக்க பிரதேசத்தில் இன்று அதிகாலையில் பொலிஸாருக்கும் சந்தேக நபருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

கடந்த மாதம் 22ஆம் திகதி அக்குரெஸ்ஸ பிரதேசத்தில் சுற்றிவளைப்பிற்கு சென்ற பொலிஸ் அதிகாரி ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்திற்கு தொடர்புடைய சந்தேக நபரே இன்றைய துப்பாக்கி சூட்டு சம்பத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவண் குணசேகர தெரிவித்துள்ளார்.

சந்தேக நபரை இன்று அதிகாலை 2.50 மணியளவில் கைது செய்வதற்காக பொலிஸ் குழு ஒன்று சென்றுள்ளனர்.

இதன்போது சந்தேக நபர் மற்றுமொரு பொலிஸ் அதிகாரி மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளர் என பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவண் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதன் போது பொலிஸார் மேற்கொண்ட பதில் துப்பாக்கி பிரயோகத்தில் சந்தேக நபர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த சந்தேக நபர் 56 வயதானவர் என பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவண் குணசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net