யாழில் ரணில் தலைமையில் சமுர்த்தி பயனாளிகளுக்கு இணைப்புச் சான்றிதழ்கள்.

யாழில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் 4500 சமுர்த்தி பயனாளிகளுக்கு இணைப்புச் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு தற்போது இடம்பெற்று வருகிறது.

இந்த நிகழ்வில் அமைச்சர் மங்கள சமரவீர, அமைச்சர் தயாகமகே, இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன், மதகுருமார்கள், சமுர்த்தி பயனாளிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த நிகழ்வில் 4500 சமுர்த்தி பயனாளிகளுக்கு பிரதமர் இணைப்புச் சான்றிதழ்களை வழங்கி வைக்கவுள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net