வெளிநாட்டு இராணுவத்தை ஒருபோதும் நாட்டுக்குள் அனுமதிக்க மாட்டோம்.

வெளிநாட்டு இராணுவத்தை ஒருபோதும் நாட்டுக்குள் அனுமதிக்க மாட்டோம்.

வெளிநாட்டு இராணுவத்தை ஒருபோதும் எமது நாட்டுக்குள் கொண்டுவர அனுமதியளிக்க மாட்டோம்.

வெளிநாட்டு படை முகாம்களை இங்கு அமைப்பது தொடர்பில் அரசாங்கத்துக்குள் எவ்வித கலந்துரையாடலும் இடம்பெறவில்லை என்று அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

மொணராகலையில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

இந்நாட்டுக்கு வெளிநாட்டு இராணுவத்தினரை கொண்டுவருவதற்கான உடன்படிக்கைகளை நிராகரிப்பதாக மகாநாயக்க தேரர்களும், கர்தினால் மெல்கம் ரஞ்ஜித்தும் கூறியுள்ளனர். அவர்களின் கோரிக்கைக்கு நானும் முழுமையான ஆதரவை வழங்குகிறேன்.

எவராவது வெளிநாட்டு இராணுவத்தைக் கொண்டுவருவதற்கான உடன்படிக்கைகளை கைச்சாத்திட முற்பட்டால் அது தொடர்பில் நாட்டு மக்களுக்கு அம்பலப்படுத்தி ஏகாதிபத்திய சக்திகளை தோற்கடிப்போம்.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கெப்பட்டிபொல தலைமையில் தளபதிகள் முன்னெடுத்த போராட்டத்தை போன்று நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஏகாதிபத்திய சக்திகளுக்கு எதிராகச் செயற்பட வேண்டும்.

ஊவா வெல்லஸ்ஸ போராட்டத்திற்கு தலைமைத்துவத்தை வழங்கியிருந்த கெப்பட்டிபொல உள்ளிட்ட தளபதிகளின் பெயர்களை அழிக்கும் வகையிலான செயற்பாடுகளில் அரசாங்கம் செயற்படாதென்றும், தேசியப் பாதுகாப்புக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம் என்றும் தெரிவித்தார்.

 

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net