உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் அத்துரலிய ரத்தன தேரர்.

உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் அத்துரலிய ரத்தன தேரர்.

பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரரால் முன்னெடுக்கப்பட்ட உண்ணாவிரத போராட்டம் சற்று முன்னர் கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேல் மாகான ஆளுநர் அசாத் சாலி, கிழக்கு மாகான ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் மற்றும் அமைச்சர் ரிசாட் பதியூதீன் ஆகியோர் பதவி விலக வேண்டுமென கோரி அத்துரலிய ரத்தன தேரர் கண்டி தலதா மாளிகைக்கு முன்பாக கடந்த நான்கு நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.

இந்தநிலையில் மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்..ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் தமது பதவியிலிருந்து விலகினர்.

இதன் பின்னணியில் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் தமது உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டுள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net