கிளிநொச்சி பச்சிலைப்பள்ளிகான சமுர்த்தி சான்றிதழ்கள்.

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் இன்று சமுர்த்தி பயனாகளிற்கான சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பட்ட 13073 சமுர்த்தி பயனாளிகளுக்கு சமுர்த்தி நிவாரண உரித்துப் படிவம் வழங்கும் ஆரம்ப நிகழ்வின் இன்று இரண்டாம்  கட்டமாக 983 பேருக்கு பளையில் கலாச்சார மண்டபத்தில் வழங்கி வைக்கப்பட்டது.

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளிற்கு இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், மற்றும் பச்சிளைப்பள்ளி பிரதேச செயலாளர் ப.ஜெயராணி பச்சிளைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர், பிரதேச சபைகளின் உறுப்பினர்கள் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் கலந்து கொண்ட கல்வி ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸவரன் உரையாற்றுகையில்,

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வேலைசெய்வதாக கூறி பல கிராமசேவகர்களின் நியமனங்கள் ரத்து செய்யப்பட்டன. எத்தனையோ இடங்களில் கட்சிகள் பார்த்து மின்சாரம் வழங்கப்படாது பழிவாங்கப்பட்டது நாங்கள் இதனையெல்லாம் உடனடியாக இனங்கண்டு தீர்த்து வைத்தோம்.

தமிழ் தேசிய கூட்மைப்பினர் ரணிலிற்கு பின்னால் போவதால் வடக்கு கிழக்கில் பல எதிர்ப்புக்கள் இருக்கின்றன.

குறிப்பாக இந்த எதிர்ப்பு வடக்கிலே அதிகமாக இருக்கின்றது. அவர்கள் உங்களுக்காக சிவாரிசுக்கள் செய்யபோய் அவர்கள் தங்களது கட்சியின் பெயரை இழக்கின்றார்கள். ஆனால் தீர்விற்காக அவர்கள் கடைசி வரை போராடிக்கொண்டு இருக்கும் எமது தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீது கரிபூச வேண்டாம் என்று கூறி விடை பெற்றார்

ஸ்ரீறிதரன் உரையாற்றுகையில்,

இன்னும் பல கிராமங்களில் பலர் சமுர்த்தி பயன் பெறாமல் விடுபட்டு இருக்கிறார்கள் உண்மையாகவே இந்த சமுர்த்தி  கொடுப்பனவிற்கு உள்வாங்கப்பட வேண்டியவர்கள் ஏதோ காரணத்திற்காக விடுபட்டுள்ளனர்.

அதற்கு பல காரணங்கள் உண்டு. 2014, 2013 களிலே இந்த நிவாரணம் வழங்கப்படுகின்ற போது அரசியல் ரீதியாகவே உதவி தொகைகளுக்கான பட்டியல் வழங்கப்பட்டது.

அங்கு சமுர்த்தி உத்தியோகத்தர்கள் கூட அரசியல் ரீதியாகவே நியமனம் செய்யப்பட்டனர். இன்றும் அவர்களில் பலர் அந்த பழையஅரசியலில் இருந்து வெளியில் வந்துள்ள போதும் சிலர் மாறவில்லை.

அவர்களின் மனம் பழைய அரசுகளுடனே இருக்கின்றது. எனவும் அவர் குறிப்பிட்டார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net