அத்துரலிய ரத்ன தேரருக்கு தொடர்ந்து சிகிச்சை.

அத்துரலிய ரத்ன தேரருக்கு தொடர்ந்து சிகிச்சை.

பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் கண்டி போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக, வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சர் ரிஷாட் பதியுதீன், மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆகியோரை பதவி விலகுமாறு கோரி கண்டி தலதா மாளிகைக்கு முன்பாக கடந்த 31 ஆம் திகதி முதல் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் ஆரம்பித்திருந்தார்.

ஆளுநர்களான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் மற்றும் அசாத் சாலி ஆகியோர் தமது ஆளுநர் பதவிகளை இராஜினாமாச் செய்வதாக ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் அறிவித்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, கடந்த 4 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அத்துரலிய ரத்ன தேரர், உண்ணாவிரதத்தை நேற்று (03) கைவிட்டார்.

இந்நிலையில், கண்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அத்துரலிய ரத்ன தேரர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக, வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net