ஜா எல பகுதியில் துப்பாக்கி சூடு ; ஒருவர் பலி!

ஜா எல பகுதியில் துப்பாக்கி சூடு ; ஒருவர் பலி!

ஜா எல ஏக்கலப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஜா எல பொலிஸ் பிரிவுக்குற்பட்ட ஏக்கல மஹாவத்தப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மினுவாங்கொடை களு அஜித் எனப்படும் கிஸாந்த அஜித் குமார என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த நபர் பாதாள உலக் குழுவைச் சேர்ந்தவர் என பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் ஜாஎல பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 1309 Mukadu · All rights reserved · designed by Speed IT net