பதற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் புத்தர் சிலை உடைப்பு!

பதற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் புத்தர் சிலை உடைப்பு!

கொழும்பு – கண்டி வீதியின் பஸ்யால நகரத்தில் உள்ள புத்தர் சிலை உடைக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பஸ்யால நகரத்தில் உள்ள வர்த்தக நிலையத்திற்கு அருகில் இருந்த புத்தர் நிலை உடைக்கப்பட்டு வீதியில் போடப்பட்ட நிலையில் பிரதேச மக்கள் இணைந்து அதனை தூக்கி வைத்துள்ளனர்.

ஒருவரின் செருப்பு ஒன்றும் சிலைக்கு அருகில் விழுந்து கிடந்துள்ளது. அத்துடன் பாதுகாப்பு கமரா கட்டமைப்பின் வயர்களும் அகற்றப்பட்டிருந்ததாக தெரியவந்துள்ளது.

நிட்டம்புவ பொலிஸார் தங்கள் விசாரணைகளுக்காக பொலிஸ் நாய்களையும் அழைத்து வருவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். எனினும் அந்த விசாரணையும் தோல்வியடைந்துள்ளது.

கைவிரல் அடையாளத்தை பரிசோதிப்பதற்காக நிபுணர்கள் அழைத்து வரப்படவுள்ள நிலையில் இன்னமும் இராணுவத்தினர் அந்த பகுதிக்கு பாதுகாப்பு வழங்கியுள்ளனர்.

இந்த சம்பவம் குழப்பம் ஏற்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்த விசாரணைகளுக்காக பல விசாரணை குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net