கனகராயன்குளம் சோதனைச்சாவடிக்கு அருகில் தீப்பிடித்த சொகுசு வாகனம்!

கனகராயன்குளம் சோதனைச்சாவடிக்கு அருகில் தீப்பிடித்த சொகுசு வாகனம்!

யாழிலிருந்து வவுனியா நோக்கிச் சென்ற சொகுசு வாகனம் ஒன்று இன்று பிற்பகல் கனகராயன்குளம் சோதனைச்சாவடிக்கு அருகில் திடீரென்று தீப்பிடித்துள்ளதாக கனகராயன்குளம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இன்று பிற்பகல் 3.30 மணியளவில் கண்டி வீதி கனகராயன்குளம் சோதனைச்சாவடிக்கு அருகாமையில் வவுனியா நோக்கி சென்ற அரச திணைக்களம் ஒன்றிற்கு சொந்தமான சொகுசு வாகனம் திடீரென்று தீப்பிடித்து எரிந்துள்ளது.

எனினும் அவ்வாகனத்தில் பயணம் மேற்கொண்ட சாரதியும் மற்றுமொருவரும் வாகனத்தை விட்டு இறங்கி ஓடியுள்ளனர்.

எவருக்கும் எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை. அயலவர்கள் தீயை அணைக்க முற்பட்ட போதும் வாகனம் தீயில் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

இவ்விபத்து குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாக கனகராயன்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net