காவிரி- கோதாவரி இணைப்பு ஏமாற்றுத் திட்டம்!

காவிரி- கோதாவரி இணைப்பு ஏமாற்றுத் திட்டம்!

காவிரி- கோதாவரி ஆகிய நதிநீர் இணைப்பு திட்டம் மக்களை ஏமாற்றும் ஒரு திட்டமென ம.தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

மதுரையில் நேற்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த வைகோ இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் 8 வழிச்சாலை திட்டத்துக்காக விவசாயிகள், தங்களது நிலத்தை வழங்குவதற்கு ஒருபோதும் முன்வரமாட்டார்களெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக மக்கள் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், நாமும் அதிராம்பட்டினத்தில் நடத்தப்படவுள்ள மனிதச்சங்கிலிப் போராட்டத்தில் பங்கேற்க தீர்மானித்துள்ளதாகவும் வைகோ கூறியுள்ளார்.

சென்னை- சேலம் இடையிலான 8 வழிழச்சாலை திட்டம், நிச்சயம் நிறைவேற்றப்படுமென தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறிய கருத்துக்கு விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 7891 Mukadu · All rights reserved · designed by Speed IT net