முல்லைத்தீவில் தொழில் நிறுவனமொன்றை திறந்து வைத்த மைத்திரி!

முல்லைத்தீவில் தொழில் நிறுவனமொன்றை திறந்து வைத்த மைத்திரி!

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு இன்று விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அங்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள தொழில் நிறுவனமொன்றை திறந்து வைத்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எண்ணக்கருவில் உருவான நாட்டுக்காக ஒன்றிணைவோம் எனும் வேலைத்திட்டமானது முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 3ஆம் திகதியிலிருந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்ட செயலக வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கின்ற இலங்கை வாழ்க்கை தொழில் வழிகாட்டல் நிறுவனத்தை (ஸ்மார்ட் ஸ்ரீலங்கா) ஜனாதிபதி திறந்து வைத்துள்ளார்.

இந் நிறுவனத்தின் மூலம் மக்களுக்கு பல நன்மைகள் கிடைக்கவுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

Copyright © 4234 Mukadu · All rights reserved · designed by Speed IT net