கிளிநொச்சியில் துவிச்சக்கர வண்டிகள் பாடசாலை மாணவர்களிற்கு வழங்கிவைப்பு.

கிளி மாவட்ட மக்கள் அமைப்பினால் இன்று 1001 துவிச்சக்கர வண்டிகள் பாடசாலை மாணவர்களிற்கு வழங்கிவைப்பு.

கிளி மாவட்ட மக்கள் அமைப்பினால் இன்று 1001 துவிச்சக்கர வண்டிகள் பாடசாலை மாணவர்களிற்கு கையளிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வு இன்று காலை 9.30 மணியளவில் கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது.

கிளி மக்கள் அமைப்பு கடந்த மார்ச் மாதம் லண்டனில் நடத்திய ஒன்றுகூடல் நிகழ்வில்,

கிளி மக்கள் அமைப்பால் 500 துவிச்சக்கரவண்டிகள் சேகரித்து பாடசாலை செல்ல சிரமப்படும் மாணவர்களுக்கு வழங்கும் திட்டம் பரிந்துரைக்கபட்டதனை அடுத்து 1001 துவிச்சக்கர வண்டிகள் சேகரிக்கப்பட்டுள்ளது.

1001 துவிச்சக்கர வண்டிகளை புலம்பெயர்ந்து வாழும் கிளிநொச்சி பிரதேசத்தை சேர்ந்த கொடையாளிகள், ஏனைய பிரதேசத்தை சேர்ந்த கொடையாளிகளின் பங்களிப்புடனும் , தாயக தொண்டர் நிறுவனங்களின் ஒருங்கிணைப்புடனும் வடக்கு, கிழக்கை சேர்ந்த மாணவர்களுக்கு இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில் யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி, யாழ் பல்கலைக்கழக பொறியியல் பீட கிளிநொச்சி வளாகத்தின் பீடாதிபதி அற்புதராஜா உள்ளிட்ட கல்வியலாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது யாழ் போதனா வை்ததியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி, பீடாதிபதி அற்புதராஜா ஆகியோர் கிளி மாவட்ட மக்கள் அமைப்பின் இவ்வாறான செயற்திட்டங்களை பாராட்டி உரையாற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net