வட, கிழக்கு இணைப்பை தடுக்கவே மத்தியில் சிங்களக் குடியேற்றம்!

வடக்கு கிழக்கு இணைப்பை தடுக்கவே மத்தியில் சிங்களக் குடியேற்றம்!

வடக்கையும் கிழக்கையும் ஒருபோதும் இணைக்கக்கூடாது என்ற நோக்கில், இரண்டு மாகாணங்களையும் இணைக்கும் மத்திய பிரதேசத்தில் சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுவதாக வடக்கின் முன்னாள் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

யாழில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் கூறினார்.

இங்கு தொடர்ந்தும் தெரிவித்த அவர்,

“18 வருடங்களாக இணைந்திருந்த வடக்கு கிழக்கு இணைப்பு அரசியல் காரணங்களுக்காக பிரிக்கப்பட்டிருந்தது. எனினும், மீண்டும் வடக்கையும் கிழக்கையும் இணைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.

அதைவிடுத்து இரண்டு மாகாணங்களையும் இணைக்கும் மத்திய பிரதேசத்தில் இருக்கும் காணிகளை அபகரிக்கின்றனர்.

அங்கு சிங்கள மக்களை குடியேற்றம் செய்கின்றனர். வடக்கும் கிழக்கும் தொடர்ந்தும் தமிழ் மக்களைக்கொண்ட மாகனங்கள் அல்ல.

மத்தியில் சிங்கள குடியேற்றங்கள் உள்ளதாக கூறுவதற்கே இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன” என மேலும் தெரிவித்தார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net