தாக்குதல்கள் குறித்து ஹிஸ்புல்லாவிடம் விசாரிக்க தீர்மானம்.

ஏப்ரல் தாக்குதல்கள் குறித்த விசாரணை செய்யும் விசேட நாடளுமன்ற தெரிவுக்குழுவுக்கு, கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவை அழைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழு நாளை (வியாழக்கிழமை) பிற்பகல் 2 மணியளவில் மீண்டும் கூடவுள்ளது.

நாளைய தினம் முன்னாள் பொலிஸ்மா அதிபர் N.K.இளங்ககோன் மற்றும் அரச நிர்வாக அமைச்சின் செயலாளரும் அழைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெரிவுக்குழுவின் 4ஆவது அமர்வு நேற்று பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரை இடம்பெற்றது.

இதன்போது, மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி, அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா அமைப்பின் தலைவர் ரிஸ்வி மௌலவி, காத்தான்குடி பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் மொஹம்மட் சுபெய் உள்ளிட்டோர் முன்னிலையாகியிருந்தனர்.

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவர் ரிஸ்வி மௌலவி, மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி ஆகியோர் தெரிவுக்குழுவில் நேற்று சாட்சியமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 8260 Mukadu · All rights reserved · designed by Speed IT net