பெண்கள் 100 மீட்டர் ஓட்டத்தின் 3 பதக்கங்களையும் ஜமைக்கா வீராங்கனைகளே வென்றனர்.

எல்லா பதக்கமும் ஜமைக்காவுக்கே

பெண்கள் 100 மீட்டர் ஓட்டத்தின் 3 பதக்கங்களையும் ஜமைக்கா வீராங்கனைகளே வென்றனர்

? எலெய்ன் தாம்ப்சன்-ஹேரா

? ஷெல்லி-ஆன் ஃப்ரேசர்-பிரைஸ்

? ஷெரிகா ஜாக்சன்

ஒலிம்பிக் சாதனையோடு தங்கப் பதக்கம் வென்றார் ஜமைக்காவின் எலெய்ன் தாம்ப்சன்-ஹேரா. 10.61 நொடிகளில் பந்தயத்தை முடித்தார். 2016 ஒலிம்பிக்கிலும் இவரே தங்கம் வென்றிருந்தார். இது அவருக்கு நான்காவது ஒலிம்பிக் பதக்கம் – 3 தங்கம், 1 வெள்ளி

34 வயதிலும் புயலெனப் பாயும் ஷெல்லி-ஆன் ஃப்ரேசர்-பிரைஸ் (10.74sec) வெள்ளிப் பதக்கம் வென்றார். இது அவருக்கு ஏழாவது ஒலிம்பிக் பதக்கம் – 2 தங்கம், 4 வெள்ளி, 1 வெண்கலம். பங்கேற்ற 4 ஒலிம்பிக் தொடர்களிலும் பதக்கம் வென்றிருக்கிறார்

தன்னுடைய சிறப்பான டைமிங்கை (10.76) வெளிப்படுத்தி வெண்கலம் வென்றிருக்கிறார் ஷெரிகா ஜாக்சன். இது அவருக்கு மூன்றாவது ஒலிம்பிக் பதக்கம்

#Tokyo2020 #Jamaica

Copyright © 5888 Mukadu · All rights reserved · designed by Speed IT net