கஷோக்கியைப் படுகொலை செய்த மரணப்படையில் ஒருவர் சிக்கினார்!

கஷோக்கியைப் படுகொலை செய்த மரணப்படையில் ஒருவர் சிக்கினார்!
பாரிஸ் விமான நிலையத்தில் கைது!!

பிரபல சவுதி அரேபியா பத்திரிகையாளர்
ஜமால் கஷோக்கியை இஸ்தான்புலில் உள்ள தூதரகத்தினுள் வைத்துச் சித்திர
வதை செய்து கொன்ற மரணப் படை
உறுப்பினர்களில் ஒருவர் எனச் சந்தேகிக்
கப்படும் நபர் பாரிஸில் வைத்துக் கைது
செய்யப்பட்டிருக்கிறார்.

பாரிஸ் றுவாஸி (RoissyCharles-de-Gaulle Airport) விமான நிலையத்தில் இருந்து
றியாட்டுக்குப் பயணமாகவிருந்த சமயத்
தில் எல்லைப் பாதுகாப்புப் பொலீஸார்
Khalid Alotaibi என்னும் 33 வயதுடைய
அந்த நபரைக் கைது செய்தனர் என்று
செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
துருக்கி விடுத்திருந்த சர்வதேச பிடியா
ணையின் கீழ் அவர் பொலீஸ் தடுப்புக்
காவலில் வைக்கப்பட்டுள்ளார். Khalid Alotaibi என்ற பெயருடைய கடவுச் சீட்டை
காண்பித்தே அவர் பயணம் செய்யவிருந்
தார் என்று தெரிவிக்கப்படுகிறது. அவர்
சமர்ப்பித்த பெயர் விவரங்கள் உறுதியா
னால் நாளை புதன்கிழமை அவர் பாரிஸ்
நீதிமன்றம் ஒன்றில் ஆஜர்செய்யப்படு
வார் எனக் கூறப்படுகிறது.

பிரபல பத்திரிகையாளரான ஜமால்
கஷோக்கி சவுதி அரேபியாவில் இருந்து வெளியேறி அமெரிக்காவில் தலைமறை
வாக இருந்து ஊடகப் பணியாற்றிவந்த
வர். தனது திருமணத்துக்கான ஆவணம் ஒன்றைப் பெறுவதற்காக அவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ஒக்ரோபர் 2ஆம் திகதி துருக்கியின் இஸ்தான்புலில் உள்ள சவுதி அரேபியாத் தூதரகத்திற்குச்
சென்ற பின்னர் காணாமற்போயிருந்தார்

சவுதி அரசாங்கத்தின் பணிப்பின் பேரில்
அங்கிருந்து விசேட விமானத்தில் வந்த
மரணப்படையணி ஒன்றைச் சேர்ந்தவர்
கள் தூதரகத்தினுள் வைத்து கஷோக்கி
யைச் சித்திரவதை செய்து உடலைப் பல
துண்டங்களாக அரிந்து கொன்றனர் என
நம்பப்படுகிறது. ஆனால் அவரது உடல்
எச்சங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்பட
வில்லை. பாரிஸில் கைது செய்யப்பட்டி
ருக்கின்ற Khalid Alotaibi என்ற பெயருக்
குரிய நபரும் சவுதி அரேபியாவின் மரண
ப்படையில் ஒருவர் என்று அமெரிக்கா
மற்றும் துருக்கி அதிகாரிகளால் குறிப்
பிடப்படுகிறார். அவரும் அவரோடு அப்
படையில் இடம்பெற்றவர்கள் எனப் பெயர் வெளியாகிய வேறு பலரும்
ஷெங்கன்(Schengen) எல்லைகளுக்குள் பயணிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டிருக்
கிறது.

நியூயோர்கில் இருந்தவாறு கஷோக்கி
சவுதி அரேபிய அரச குடும்ப ஆட்சியைக்
கடுமையாக விமர்சித்து வந்த காரணத்
துக்காக எம்பிஎஸ்( MBS)என்று அழைக்
கப்படும் சவுதியின் முடிக்குரிய இளவரசர் மொஹமட் பின் சல்மானே (Crown Prince Mohammed bin Salman) அவரை தனது
ரகசிய ஏஜென்டுகள் மூலமாகப் பழி
தீர்த்தார் என்ற குற்றச்சாட்டுகள் உள்ளன.
இளவரசருடைய மெய்க்காவலர்கள் உட்படப் படுகொலையில் தொடர்புபட்ட
குழுவினருக்கு எதிராகத் துருக்கியில்
வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்
பட்டுவருகின்றன.

கஷோக்கி படுகொலை நடந்து மூன்று
ஆண்டுகளின் பின்னர் பிரான்ஸின்
அதிபர் மக்ரோன் கடந்தவாரம் சவுதி
இளவரசர் மொஹமட் பின் சல்மானை
நேரில் சந்தித்துப் பேசியிருந்தார்.
கஷோக்கி படுகொலைக்குப் பின்னர்
சவுதி அரேபியாவுக்கு விஜயம் செய்து
இளவரசரைச் சந்தித்த முதலாவது மேற்கு நாட்டுத் தலைவர் அவரே ஆவார்.
கொலை மற்றும் மனித உரிமை மீறல்
களுக்காகச் சர்வதேச அளவில் கண்டிக்
கப்பட்டுவருகின்ற இளவரசரை மக்ரோன்
சந்தித்ததற்கு எதிர்ப்புக் குரல்கள் எழுந்
தமை குறிப்பிடத்தக்கது.
குமாரதாஸன்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net