மூன்றம் கட்ட ஈழயுத்தத்திற்கு ஓய்வளித்து தென்தமிழீழப் போராளிகளை வழியனுப்பி வைக்கையில் ஆற்றிய உரையிற் பல அம்சங்கள் அடங்கியிருப்பினும் குறிப்பாக சோனகர்கள் பற்றிக் குறிப்பிட்டவிடயங்கள் மிகவும் முக்கியமானவை. இற்றைக்கு
முப்பதாண்டுகளுக்கு முன்பு நடந்த கசப்பான நிகழ்வுகளும் அவற்றின் அனுபவங்களாற் பெற்றிருந்த முதிர்ச்சியும் இன்றிலிருந்து இருபதாண்டுகளுக்கு ஆற்றியிருந்த உரையிற் தெரிகின்றது. அங்கே கூறிய விடயங்கள் நேற்றைக்கு இன்றைக்கு மட்டுமல்ல நாளைக்கும் பொருத்தப்பாடானதே.