வவுனியாவில் விபத்தில் படுகாயமடைந்த பெண் மரணம்!
வவுனியா செட்டிகுளம் பகுதியில் கடந்த 5 ம் திகதி இடம்பெற்ற விபத்தில் 75 வயதான பெண்மணி ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டிருந்தார்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
மதவாச்சியில் இருந்து மன்னார் நோக்கிசென்ற வாகனம் செட்டிகுளம் தபால் நிலையத்திற்கு அருகாமையில் சென்று கொண்டிருந்த போது அவ்வீதி வழியே மாடுகளை கலைத்துசென்ற வயோதிப்பெண்ணை மோதியதிலேயே விபத்து இடம் பெற்றதாக செட்டிகுளம் பொலிசார் தெரிவித்தனர்.

விபத்தில்படுகாயமடைந்த பெண்ணை அப்பகுதியில் நின்றவர்கள் மீட்டு செட்டிகுளம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளிற்காக வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றபட்டார். தொடர்ந்துசிகிச்சை பெற்றுவந்த நிலையில் செட்டிகுளம் பிரதேச வைத்தியசாலைக்கு மாற்றபட்டு வீட்டிற்கு சென்றிருந்தார்.
இந்நிலையில் (16.12.2018) அதிகாலை குறித்த பெண்மரணமடைந்துள்ளார். விபத்தில் பெரியசாமி செவனை என்ற மூதாட்டியே மரணமடைந்துள்ளார்.
மேலதிக விசாரணைகளை செட்டிகுளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.