கிளிநொச்சி இரணைமடுகுளம் வழமைக்கு மாறாக வான் பாய்கிறது.

கிளிநொச்சி இரணைமடுகுளம் வழமைக்கு மாறாக வான் பாய்கிறது.

நேற்றிரவு(21) முதல் பெய்த கடும் மழை காரணமாக கிளிநொச்சி இரணைமடுகுளம் வழமைக்கு மாறாக அனைத்து கதவுகளும் முழுமையாக திறக்கப்பட்ட நிலையிலும் மூன்றடி வான் பாய்கிறது.

இரணைமடுகுளம் அபிவிருத்திச் செய்யப்பட்டு இரண்டு உயர்த்தப்பட்டுள்ள நிலையில் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

குளத்திற்கு வருகின்ற நீரின் அளவை விட வெளியேறுகின்ற நீரின் அளவு குறைவாக இருப்பதாக நீர்ப்பாசனத்திணைக்களத்தினர் குறிப்பிடுகின்றனர்.

இருந்த போதிலுலும் மக்கள் பீதிகொள்ளத் தேவையில்லை என்றும் ஆனாலும் தாழ் நிலப் பிரதேசங்களில் வாழ்கின்ற மக்கள் தங்களின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என கிளிநொச்சி பிராந்திய நீர்ப்பாசனத் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் என். சுதாகரன் தெரிவித்துள்ளார்.

36 அடி நீர் கொள்ளளவு கொண்ட குளமானது இன்று(22) நாற்பது அடியாக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களும் நிரம்பி வான்பாய்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net