கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னாரில் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு 10 ஆயிரம் ரூபா நிதியுதவி!

கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னாரில் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு 10 ஆயிரம் ரூபா நிதியுதவி!

யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 16 ஆயிரத்து 872 குடும்பங்களைச் சேர்ந்த 54 ஆயிரத்து 819 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சேதமடைந்த வீடுகளின் எண்ணிக்கை 238 ஆகும்.

இவற்றில் 10 வீடுகள் முற்றாகச் சேதமடைந்துள்ளதுடன் 218 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

38 நலன்புரி நிலையங்களில் 3 ஆயிரத்து 602 குடும்பங்களைச் சேர்ந்த 11 ஆயிரத்து 299 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட வீடுகளுக்காக ஆரம்ப கட்ட நிதியுதவியாக 10 ஆயிரம் ரூபா வழங்கப்படுவதாகவும் மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக 24 மணித்தியாலமும் செயற்படும் தொலைபேசியின் ஊடாக அனர்த்த நிலைமை தொடர்பில் அறிவிக்க முடியும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கான தொலைபேசி இலக்கம் 117 ஆகும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net