மும்பையில் தீ விபத்து: 4 பேர் பலி!

மும்பையில் தீ விபத்து: 4 பேர் பலி!

மும்பையில் காந்திவிலி கிழக்கு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று (திங்கட்கிழமை) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சுமார் 4 மணித்தியாலத்தின் பின்னர் குறித்த தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இரண்டு துணி ஆலைகளுக்கிடையில் இருந்த சுவர் இடிந்து விழுந்துள்ளது.

இந்நிலையில் குறித்த இடிபாடுகளுக்குள் எவரேனும் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், குறித்த பகுதியில் தொடர்ந்தும் மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Copyright © 1770 Mukadu · All rights reserved · designed by Speed IT net