கிளிநொச்சி மாற்றுவலுவுள்ளோர் சங்கத்தினரால் 3500 மேற்பட்டோருக்கு உதவிகள்.

கிளிநொச்சி மாவட்ட மாற்றுவலுவுள்ளோர் சங்கத்தினரால் 3500 மேற்பட்டோருக்கு உதவிகள்.

வெள்ளம் அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு கிளிநொச்சி மாவட்ட மாற்றுவலுவுள்ளோர் சங்கம் உதவிகளை மேற்கொண்டு வருகின்றது.

மாற்று வலுவுள்ளோர் சங்கத்தின் தலைவர் சரவணனின் வேண்டுகோளுக்கு அமைவாக புலம்பெயர் உறவுகளின் உதவியுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

உடனடியாக மக்களுக்கு தேவையான அத்தியாவசிய உலருணவுகள், உள்ளிட்ட பொருட்களே வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் 17 முகாம்களைச் சேர்ந்த 3500 க்கு மேற்பட்ட மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. தொடர்ந்தும் வழங்கியும் வருகின்றனர்.

இதேவேளை தொடர்ந்தும் கிணறுகள் சுத்தம் செய்தல் உள்ளிட்ட உதவிகளை வழங்கவும் மாற்று வலுவுள்ளோர் சங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது என அதன் தலைவர் சரணவனன் தெரிவித்துள்ளார்

Copyright © 3936 Mukadu · All rights reserved · designed by Speed IT net