யாழில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் பலி!
யாழ்ப்பாணம் மானிப்பாய் வீதி ஆறுகால் மடத்தடிப் பகுதியில் இன்று புதன்கிழமை காலை நடைபெற்ற வாகன விபத்தில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
ஆறுகால் மடம் புதுவீதியைச் சேர்ந்த திரவியம் வியஜராச என்னும் குடும்பஸ்தரே உயிரிழந்தவர் ஆவர்.
குறித்த குடும்பஸ்தர் மானிப்பாய் வீதீ ஆறுகால்மடப் பகுதியில் சிறு வியாபார நிலையம் ஒன்றினை நடத்தி வந்துள்ளார்.
இன்று புதன்கிழமை காலையும் வழமை போன்று வீட்டில் இருந்து தனது வியாபார நிலையத்தை திறப்பதற்காக அவர் நடந்து சென்றுள்ளார்.
வுpயாபார நிலையம் நோக்கிச் சென்று கொண்டிருந்த குறித்த குடும்பஸ்தர் வீதியை கடக்க முற்பட்ட போது யாழ்ப்பாணத்தில் இருந்து மானிப்பாய் நோக்கி மிக வேகமாக பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கில் மோதித் தள்ளியுள்ளது.
இதனால் வீதியில் இருந்து தூக்கி எறியப்பட்ட குடும்பஸ்தர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
சம்பவ இடத்திற்கு வந்த யாழ்.பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

