ஓமந்தையில் வீதி புனரமைப்புப்பணிகள் ஆரம்பித்து வைப்பு

ஓமந்தையில் வீதி புனரமைப்புப்பணிகள் ஆரம்பித்து வைப்பு

வவுனியா ஓமந்தை அரசமுறிப்பு வீதி புனரமைப்புப்பணிகள் இன்று வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர் அஞ்சலா கோகிலகுமாரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

ஓமந்தை அரசமுறிப்பு ஒரு கிலோ மீற்றர் நீளமான வீதி புனரமைப்பிற்கு வன்னி மாவட்ட நாடாளுமனற் உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் கிராமத்தின் அபிவிருத்தி கம்பெரலியா வேலைத்திட்டத்தின் குறித்து ஒதுக்கப்பட்ட ஜந்து இலட்சம் ரூபா நிதியில் வவுனியா தமிழ் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் திருமதி அஞ்சலா கோகிலகுமாரின் வேண்டுகோளிற்கு அமைவாக இன்று ஓமந்தை அரசமுறிப்பு வீதிப்புனரமைப்புப்பணிகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

கிராமத்தலைவர்கள், கிராம மக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

Copyright © 3187 Mukadu · All rights reserved · designed by Speed IT net