திருகோணமலையில் கட்டு துவக்கு வெடித்ததில் ஒருவர் படுகாயம்!

திருகோணமலை பகுதியில் கட்டு துவக்கு வெடித்ததில் ஒருவர் படுகாயம்!

திருகோணமலை – திம்பிரிவெவ பகுதியில் கட்டு துவக்கு வெடித்ததில் நபரொருவர் படுகாயமடைந்து இன்று திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் மொரவெவ, மஹதிவுல்வெவ முதலாம் வட்டாரத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான கே.ஆரியசேன (49 வயது) என்பவரே படுகாயமடைந்துள்ளார்.

குறித்த நபர் வயல் காவலுக்காக சென்ற வேளை கட்டு துவக்கு தவறுதலாக வெடித்ததாகவும், அதனால் உடம்பில் பலத்த காயங்கள் ஏற்பட்டு அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் மொரவெவ பகுதியில் மிருகங்களை வேட்டையாடுபவர்கள் குறித்து தகவல்களை வழங்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Copyright © 9548 Mukadu · All rights reserved · designed by Speed IT net