வடக்கின் புதிய ஆளுநரைச் சந்தித்த சம்பந்தன்.

வடக்கின் புதிய ஆளுநரைச் சந்தித்த சம்பந்தன்.

வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமனம் பெற்ற கலாநிதி சுரேன் ராகவன் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனைக் கொழும்பில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

கலாநிதி சுரேன் ராகவன் வடக்கு ஆளுநராக நியமனம் பெற்றதன் பின்னர் இடம்பெற்ற முதலாவது உத்தியோகப்பூர்வ சந்திப்பு இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இச்சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம். ஏ சுமந்திரன் அவர்களும் கலந்துகொண்டிருந்தார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net