கிளிநொச்சியில் ஒருமணித்தியால காத்திருப்பின் பின் அடிக்கல் நாட்டு விழா ஆரம்பம்
அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்து அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களின் உத்தரவின் பேரில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மக்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்குவதாக உறுதி அளித்ததன் பிரகாரம் இன்று கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுக்கு உட்ப்பட்ட உமையாள் புரம் பகுதியில் முதல்கட்டமாக ஐம்பது குடும்பங்களுக்கு ஏழு அரை லட்சம் பெறுமதியில் வீடுகளை வழங்குவதற்கு இன்று பதினோரு மணியளவில் நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது
இன் நிகழ்விற்கு பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் , ஆளுனரின் செயலாளர் ,மேலதிக அரசாங்க அதிபர் வீடமைப்பு அதிகார சபையின் கிளிநொச்சி உத்தியோகத்தர்கள், தினைகளங்களின் அதிகாரிகள் பயனாளிகள் மக்கள் எனப் பலரும் உரிய நேரத்திற்கு வருகை தந்து காத்திருந்த போதும் வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் வருகைதர தாமதமானதால் அனைவரும் ஒரு மணித்தியாலம் காத்திருந்தனர் சுமார் பன்னிரண்டு மணியளவில் குறித்த அதிகார சபையின் தலைவர் வருகைதந்ததன் பின்னர் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



