ஓமந்தையில் மதுபான நிலையம் அமைப்பதில் ஆட்சேபனை இல்லை.

ஓமந்தையில் மதுபான நிலையம் அமைப்பதில் ஆட்சேபனை இல்லை : பாடசாலை அதிபர் கடிதம்.

வவுனியா ஓமந்தை அம்மாச்சி உணவகத்திற்கு அருகிலுள்ள முன்னர் வெதுப்பகம் அமைந்திருந்த பகுதியில் மதுபான விற்பனை நிலையம் அமைப்பதில் ஓமந்தை மத்திய கல்லூரிக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை.

இவ்வாறு ஓமந்தை மத்திய கல்லூரியின் பாடசாலை அதிபர் கெ.தனபாலசிங்கம் மதுவரி ஆணையாளர் கொழும்பிற்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வேலாயுதம் சுரேந்திரனால் எமக்கு வழங்கப்பட்டுள்ள கடிதத்தின் படி அவரால் கண்டி வீதி, ஓமந்தைப்பகுதியில் அமைக்கப்படும் பியர் விற்பனை நிலையம் பாடசாலையிலிருந்து 500மீற்றர் தூரத்திற்கு அப்பால் இருப்பதால் பாடசாலைக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என்று தெரிவிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை இப்பகுதியில் குறித்த மதுபான விற்பனை நிலையம் அமைப்பதற்கு பல்வேறு பொது அமைப்புக்கள் தமது எதிர்ப்பினைத் தெரிவித்து வருகின்றதுடன் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தலைவரும் தமது சபையினரின் அனுமதியின்றி அமைக்கப்படும் குறித்த மதுபான விற்பனை நிலையத்தினை அனுமதிக்கப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

Copyright © 4823 Mukadu · All rights reserved · designed by Speed IT net