ஆளுநருக்கு எதிரான கையெழுத்து வேட்டை

ஆளுநருக்கு எதிரான கையெழுத்து வேட்டை

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் ஏற்பாட்டில் கடந்த 18ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட கிழக்கு மாகாண ஆளுநருக்கு எதிரான கையெழுத்து வேட்டை இரண்டாவது நாளாக கொக்கட்டிச்சோலை பட்டிப்பளை சந்தியின் இடம் பெற்றது.

இக்கையெழுத்து வேட்டையானது தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் பட்டிப்பளை பிரிவின் அமைப்பாளரும் மண்முனை தென்மேற்கு பிரதேச சபையின் உறுப்பினருமான பீ.பாஸ்கர் தலைமையில் நடைபெற்றது.

அரச தலைவரால் நியமிக்கப்பட்டிருக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் இனவாதம் பேசுவதாகவும் உடனடியாக நீக்கவேண்டும் எனவும் தமிழர்கள் ஒன்றுபட்ட வேண்டும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரினால் தமிழ் இனம் ஏமாற்றப்படுகின்றனர் தீவிரவாத ஆளுநரை உடனடியாக நீக்க வேண்டும் எனும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சுமார் 400 க்கு அதிகமான பொதுமக்களின் கையெழுத்துக்கள் சேகரிக்கப்பட்டது என்று தெரிவிக்கப்படுகிறது.

Copyright © 3212 Mukadu · All rights reserved · designed by Speed IT net