ஓமந்தை மதுபான நிலையம்! எதிராக தீர்மானம் நிறைவேற்றம்!

ஓமந்தை மதுபான நிலையம்! எதிராக தீர்மானம் நிறைவேற்றம்!

வவுனியா – ஓமந்தை, அம்மாச்சி உணவகத்திற்கு அருகில் அமைக்கப்படவிருந்த மதுபான விற்பனை நிலையத்திற்கு அப்பகுதி மக்கள் தமது எதிர்ப்பினை தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் வவுனியா, தெற்கு தமிழ் பிரதேசசபை கூட்டத்தில் தம்மால் கொண்டு வரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தமிழ் தெற்கு பிரதேசசபை உறுப்பினர் அஞ்சலா கோகிலகுமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவரிடம் இன்று தொடர்பு கொண்டு வினவிய போதே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

இம் மாதம் 16ஆம் திகதி ஓமந்தை அம்மாச்சி உணவகத்திற்கு அருகில் முன்னர் வெதுப்பகம் அமைந்திருந்த காணியில் மதுபான விற்பனை நிலையம் அமைப்பதற்குரிய சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

எனினும், அப்பகுதியை சேர்ந்த பலரும் தமது எதிர்ப்பினை தெரிவித்துள்ளதுடன் பல கடிதங்களையும் வழங்கியிருந்தனர்.

இந்த நிலையில் இது தொடர்பில் வவுனியா, தெற்கு தமிழ் பிரதேச சபைத் தலைவரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு சபையின் உறுப்பினர்களினால் மதுபான விற்பனை நிலையம் அமைப்பதற்கு எதிராக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net