மன்னார் புதைகுழி அறிக்கை வெள்ளி வெளிவருகின்றது?

மன்னார் புதைகுழி அறிக்கை வெள்ளி வெளிவருகின்றது?

மன்னார் மனிதப்புதைகுழியில் இருந்து எடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் அமெரிக்காவுக்கு அனுப்பி காபன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், குறித்த மாதிரிகளின் பரிசோதனை அறிக்கை எதிர்வரும் 8 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வெளிவரும்” என அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.

மன்னார் மனித புதைகுழியில் அகழ்வு பணிகள் இன்று புதன்கிழமை (06) 139 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

குறித்த வளாகத்தில் இருந்து 312 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்ட நிலையில், அவற்றில் 297 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

இவற்றில் 26 மனித எலும்புக்கூடுகள் சிறுவர்களுடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது.

பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் ஆய்வு அறிக்கை எதிர்வரும் வெள்ளிக்கிழமை 8 ஆம் திகதி வெளிவரும்” என அவர் தெரிவித்தார்.

மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் தெரிவு செய்யப்பட்டு கடந்த 24 ஆம் திகதி அமெரிக்காவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு புளோரிடாவில் உள்ள ஆய்வுகூடத்தில் காபன் பரிசோதனைக்காக கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 8336 Mukadu · All rights reserved · designed by Speed IT net