யாழில் பிரதமர் தலைமையில் முக்கிய கலந்துரையாடல்.

யாழில் பிரதமர் தலைமையில் முக்கிய கலந்துரையாடல்.

இன்று வடக்கிற்கு விஜயம் செய்துள்ள பிரதமர், கோப்பாய் பிரதேச செயலகத்தின் கட்டிடத்தை திறந்து வைத்தார்.

அதன் பின்னர் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திற்கு விஜயம் செய்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்று வருகின்றது.

ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம், கைதொழில் அமைச்சர் ரிசாட் பதியுதீன், போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் உள்ளிட்ட பலர் இந்த கலந்துரையாடலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த கலந்துரையாடலின் பின்னர் வீடமைப்பு, மீள்குடியேற்ற, அபிவிருத்திப் பணிகளின் முன்னேற்றங்களை ஆராயும் கூட்டத்திலும் பிரதமர் கலந்துக்கொள்ளவுள்ளார்.

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் திடீர் விபத்து சிகிச்சைப் பிரிவும் பிரதமர் தலைமையில் திறந்து வைக்கப்படவுள்ளது.

மேலும், பலாலி விமான நிலையம், காங்கேசன்துறை துறைமுகம் ஆகியவற்றுக்கு விஜயம் செய்து நிலைமைகளை நேரில் கண்காணிக்கவுள்ளார்.

அதனையடுத்து, மயிலிட்டி கிராமத்தில் மீளக்குடியேறிய மக்களுக்காக நிர்மாணிக்கப்படும் குடியிருப்புத் தொகுதிக்கான அடிக்கல் நாட்டும் வைபவமும் பிரதமர் தலைமையில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 5428 Mukadu · All rights reserved · designed by Speed IT net