65 பாடசாலைகளுக்கு கிழக்கு ஆளுநரினால் உபகரணம் வழங்கி வைப்பு
கிழக்கு ஆளுநர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாவினால் பாடசாலைக்கான இலத்திரனியல் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தில் இன்று கிழக்கு ஆளுநர் தலைமையில் இந் நிகழ்வு நடைபெற்றுள்ளது.
இதன் போது கிழக்கு மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட 65 பாடசாலைகளுக்கு மடிக்கணினி மற்றும் கணணி அச்சுபொறி ஆகியன வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இந் நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் எம்.ரி.எம்.நிசாம் மற்றும் கல்வி அதிகாரிகள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.



