ஐ.நா. மனித உரிமைகள் விடயங்களை நிறைவேற்ற கால அவகாசம் தேவை!

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களை நிறைவேற்ற இலங்கைக்கு கால அவகாசம் தேவை என, தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இருப்பினும் இந்த கால அவகாசமானது கால விரயம் இல்லை எனவும் அது சர்வதேச கண்காணிப்பிற்கான கால நீடிப்பு என்றும் நேற்று (வெள்ளிக்கிழமை) சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அடுத்த மாதம் அமர்வுக்கு முன்னர் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று பிரித்தானியா அறிவித்திருந்தது.
இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த சுமந்திரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது இந்த விடயத்தை காலவிரயம் என எண்ணவில்லை, மாறாக சர்வதேச கண்காணிப்பிற்கான காலம் என கருதுவதாகவும் தெரிவித்தார்.
மேலும் பிரித்தானியாவின் முக்கிய நகர்வுகளுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவை வழங்கும் என அவர் கூறியுள்ளார்.