தமிழீழ மாவீரர்களை வணங்கும் இந்திய பக்தர்கள்!

தமிழீழ மாவீரர்களை வணங்கும் இந்திய பக்தர்கள் !

தமிழீழ தெய்வங்களான மாவீரர்களை இந்தியர்கள் வணங்கும் ஒளிப்படங்கள்இணையத்திலும் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

அண்மையில் இந்தியாவில் ஜம்மு காஸ்மீரில் கொல்லப்படட இந்திய படைகளுக்கு வணக்கம் செலுத்தும் நிகழ்வுகள் தமிழகம் எங்கும் நடந்துவருகிறது.

அதில் கொல்லப்படட இந்திய ராணுவ வீரர்களுக்கு பதிலாக ஈழ விடுதலைக்கு போராடி மடிந்த விடுதலைப் புலிகளின் மாவீரர்களையே படங்களாகவும் பதாகைகளாகவும் வைத்து வணக்கம் செலுத்தி வருகின்றனர்.

சமூக வலைத்தளங்களிலும் இப் படங்களையே பகிர்ந்து வருவது ஆச்சரியப்படுத்தியதோடு நகைப்புக்கும் உள்ளாகியுள்ளது!

அதேவேளை “காலம் தான் எத்தனை குரூரமானது!எல்லையில் இறந்து போன தங்கள் வீரர்களுக்கு பதில் தங்கள் கூட்டுச்சதியால் கொல்லப்பட்ட நம் வீரர்களை வைத்து வழிபடச்செய்திருக்கிறது!

இறந்து போன தங்கள் வீரர்களே யார் எவர்னு தெரியாம ஒரே நாட்டுக்குள்ள வாழ்ந்துட்டு இருக்கவன் எல்லாம் அகதின்னு நம்மள சொல்லுறது தான் ஆகப்பெரிய நகைச்சுவை.” என்று ஈழ தமிழர்கள் இதற்க்கு நகைச்சுவையாக விமர்ச்சித்தது பெருமைபட்டுக்கொள்கின்றனர்

Copyright © 8321 Mukadu · All rights reserved · designed by Speed IT net