கிளிநொச்சி வட்டக்கச்சியில் இராணுவம் ஆக்கிரமித்துள்ள 394 ஏக்கர் விவசாய வளம்!
கிளிநொச்சி மாவட்டத்தின் முக்கிய விவசாய வளங்களில் ஒன்றான வட்டக்கச்சி விவசாயப்பண்ணையின் 394 ஏக்கர் பத்துவருடங்களாக இராணுவத்தின் ஆக்கிரமிப்பின் கீழ் இருந்து வருகின்றது.
வெறும் 26 ஏக்கரில் மட்டுமே இன்று விவசாயப்பண்ணை இயங்கும் துரதிஸ்ட நிலை காணப்படுகின்றது.
1954ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த விவசாய பண்ணை 420 ஏக்கர் நிலப்பரப்பை கொண்டதாக சிறீலங்காவின் இரண்டாவது பெரும்பண்ணையாக காணப்பட்டது.
வடக்கின் விவசாய கல்வி பயிரிடல் விலங்கு வேளாண்மை உள்ளிட்ட பல்வேறு விவசாய துறைசார் விடயங்களுக்கு பலமாக இருந்த இந்த விவசாய பண்ணை 394 ஏக்கரில் பயிடலையும் 26 ஏக்கரில் விவசாய போதனா நடவடிக்கைகளுக்குமாக கொண்டு இயங்கிவந்தது.
இன்று வெறும் 26 ஏக்கரில் மட்டுமே இயங்கிவரும் பண்ணையின் 394 ஏக்கர் இராணுவத்தில் ஆக்கிரமிப்பில் இருப்பதும் அதுவும் மக்கள் குடியிருப்பு பகுதிக்குள் இந்தகைய பெருநிலத்தில் படையினர் இருப்பது வடக்கின் இராணுவ மயத்தை வெளிப்படுத்துகின்றது.











