கொக்குவில் பெற்றோல் குண்டுத் தாக்குதல் : நால்வர் கைது?

கொக்குவில் பெற்றோல்  குண்டுத் தாக்குதல் : நால்வர் கைது?

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் வீடொன்றின் மீது பெற்றோல்  குண்டுத் தாக்குதல் நடத்திய சந்தேகத்தின் பேரில் நான்கு பேரை கைது செய்துள்ள யாழ். மாவட்ட குற்றத் தடுப்பு விசேட காவல்துறையினர் அவர்களிடமிருந்து ஆயுதங்களையும் மீட்டுள்ளனர்.

நேற்றிரவு நடத்தபட்ட தேடுதலின் தொடர்ச்சியாகவே இக்கைது நடந்துள்ளது.

கொக்குவில் கிழக்கு பகுதியில் உள்ள வீடொன்றின் மீது வாள்வெட்டுக் கும்பலொன்று கடந்த சில தினங்களுக்கு முன்னர் தாக்குதல் நடத்துயிருந்தது. இதன் போது அங்கிருந்த வாகனங்களும் எரிந்து நாசமாகியுள்ளது.

விசேட குற்றத் தடுப்பு பிரிவினால் கைது செய்யப்பட்டவர்களும் அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட ஆயுதங்களையும் கோப்பாய் காவல்துறையினரிட‌ம் ஒப்படைத்துள்ளனர்.

இதற்கமைய நீதிமன்றில் பிற்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை கோப்பாய் காவல்துறையினரும் மேற்கொண்டு வருகின்றனர்.

Copyright © 1366 Mukadu · All rights reserved · designed by Speed IT net