ஜெயலலிதாவுக்கு புகழாரம் சூடிய மோடி.

ஜெயலலிதாவுக்கு புகழாரம் சூடிய மோடி.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள், தமிழகம் முழுவதும் அனுஷ்டிக்கப்படுகின்றது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, அவரை புகழ்ந்து டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ளார்.

ஜெயலலிதாவின் பிறந்தநாள் தினமான இன்று, அவரை பாராட்டும் வகையில் டுவிட்டரில் சில விடயங்களை பதிவேற்றியுள்ளார். அதில் மோடி கூறியுள்ளதாவது,

‘‘தமிழக வளர்ச்சிக்கு ஜெயலலிதா ஆற்றிய பங்களிப்பு தலைமுறைகளை கடந்தும் நினைவில் நிற்கும். மேலும் மக்களுக்காக அவரால் கொண்டுவரப்பட்ட திட்டங்களினால் எண்ணற்ற ஏழைகள் இன்னும் பயனடைந்து வருகின்றனர்.

இவ்வாறு தமிழகத்தில் சிறந்த நிர்வாகியாகவும் கருணை உள்ளத்துடன் செயற்பட்ட ஜெயலலிதாவை நினைவுகூர வேண்டியது அவசியம்” என மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

இதேவேளை அ.தி.மு.க தலைமை காரியாலத்தில் முதல் முறையாக மோடியின் படம் இன்று வைக்கப்பட்டுள்ளது. அதில் பிரதமர் மோடியிடம், ஜெயலலிதா கோரிக்கை மனுவை கையளிப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 4197 Mukadu · All rights reserved · designed by Speed IT net