விபத்தில் சிக்கிய வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான்.
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் சென்றுகொண்டிருந்த வாகனம் இன்று காலை விபத்திற்குள்ளாகியுள்ளது.
கொழும்பில் இருந்து வவுனியா நோக்கி சென்றுகொண்டிருந்த வாகனம் மதவாச்சி புனாவை பகுதியில் வைத்து விபத்திற்குள்ளாகியுள்ளது.
இதன்போது, வாகனம் சேதமடைந்துள்ளதுடன், நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் மற்றும் அவருடன் பயணித்த பாதுகாப்பு உதவியாளர், ஊடகப்பிரிவு ஊழியர் ஆகியோர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், குறித்த விபத்துத் தொடர்பான விசாரணைகளை மதவாச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.