வீட்டுத்திட்டத்தில் பெண் தலைமைத்துவ குடும்பங்களையும் கவனத்தில் கொள்ளுங்கள்!

வீட்டுத்திட்டத்தில் பெண் தலைமைத்துவ குடும்பங்களையும் கவனத்தில் கொள்ளுங்கள்!

வடக்கு- கிழக்கில் கைவிடப்பட்ட, போரால் பாதிக்கப்பட்ட பெண் தலைத்துவ குடும்பங்களை கவனத்தில் கொண்டு வீட்டுத் திட்டத்தை செயற்படுத்துமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற குழு நிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர்,

”வடக்கு, கிழக்கு மக்கள் தங்களுக்கான வீட்டுத் திட்டத்தை பெற்றுக் கொள்வதற்கு வீடமைப்பு அமைச்சையே நம்பி இருக்கின்றனர்.

அதன்படி, தங்களுக்கு வீடு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் மக்கள் காணப்படுகின்றனர். மக்களின் நம்பிக்கையை அமைச்சு தொடர்ச்சியாக செயற்படுத்த வேண்டும்.

அமைச்சின் சிறப்பான செயற்பாடுகள் தொடரும் பட்சத்தில் நாமும் அவர்களுடன் கைக்கோர்த்து செயற்பட தயார். மக்களும் ஆதரவாக செயற்படுவர்” எனத் தெரிவித்தார்.

Copyright © 1604 Mukadu · All rights reserved · designed by Speed IT net