முதியோர் இல்ல சிற்றூழியர்களிற்கான நியமன கடிதங்கள் ஆளுநரால் வழங்கி வைக்கப்பட்டது.

முதியோர் இல்ல சிற்றூழியர்களிற்கான நியமன கடிதங்கள் ஆளுநரால் வழங்கி வைக்கப்பட்டது.

கிளிநொச்சியில் இன்று(27) இடம்பெற்ற வடமாகாண ஆளுநரின் தலைமையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே குறித்த நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த பதவி நிலைக்காக 14பேர் அழைக்கப்பட்டிருந்ததுடன், இன்று வருகைதந்திருந்த 9 பேருக்கான நியமன கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாணத்தின் அரச முதியோர் இல்லத்திற்கான சிற்றூழியர்கள் நியமனமே இன்று வழங்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் பத்திநாதன், ஆளுநரின் செயலாளர் இளங்கோவன், வடக்கு மாகாண கல்வி,சுகாதாரம், விவசாயம், மகளீர் விவகாரம், உள்ளுராட்சி, அமைச்சின் செயலாளர்கள் வடக்கு மாகாண காணி ஆணையாளர், உள்ளுராட்சி ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்தகொண்டிருந்தனர்.

Copyright © 4423 Mukadu · All rights reserved · designed by Speed IT net