கிளிநொச்சியில் மூன்றரை வயதுக் குழந்தைக்கு நடந்த கொடூரம்!

கிளிநொச்சியில் மூன்றரை வயதுக் குழந்தைக்கு நடந்த கொடூரம்!

கிளிநொச்சி அக்கராயன் பிரதேசத்துக்குட்பட்ட 50 வீட்டுத்திட்ட பகுதியில் நேற்று மாலை தாய் தந்தையரின்றி உறவினர்களின் பராமரிப்பில் இருந்த மூன்றரை வயது குழந்தையொன்று அயலவர்களுடன் சேர்ந்து அருகிலிருந்த கடைக்கு சென்ற சமயம் குழந்தையினுடைய மாமாவினால் வீதியில் வைத்து பொதுமக்கள் முன் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளது

கிளிநொச்சி அக்கராயன்குளம் 50 வீட்டுத்திட்டத்தில் நேற்றுமாலை 5.30 மணியளவில் மூன்றரை வயதுக் குழந்தை ஒன்று அவரது உறவினர்களால் வீதியில் வைத்து கடுமையாக தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது

குறித்த குழந்தை வீதியில் வைத்து தாக்கப்பட்டமை தொடர்பில் அயலவர்களால் அக்கராயன் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டும் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் அவசர அழைப்பினை ஏற்படுத்தி குறித்த முறைப்பாட்டினை செய்த போதும் இந்த விடயம் தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்டவில்லை.

குறித்த சிறுமி கடுமையாக தாக்கப்பட்டிருப்பதாகவும் சிறுமியை உடனடியாக மருத்துவப் பரிசோதனைக்குட்படுத்தப் உரிய தரப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Copyright © 4700 Mukadu · All rights reserved · designed by Speed IT net