ஐ.நா. தீர்மானத்தின் அவசியம் குறித்து சம்பந்தன் விளக்கம்.

ஐ.நா. தீர்மானத்தின் அவசியம் குறித்து சம்பந்தன் விளக்கம்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவைத் தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படுவதன் அவசியம் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இலங்கைக்கான ஐ.நா.வின் வதிவிடப் பிரதிநிதியிடம் தெளிவுபடுத்தியுள்ளார்.

இலங்கைக்கான ஐ.நா. வின் வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பு நேற்று (சனிக்கிழமை) கொழும்பில் இடம்பெற்றுள்ளது. இதன்போதே இந்த விடயம் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

மேலும் இந்த சந்திப்பின்போது சமகால அரசியல் நிலைமைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அத்தோடு ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்களை நடைமுறைபடுத்துவதில் உள்ள பிரச்சினைகள் குறித்தும், எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் எடுத்துரைத்துள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான தீர்மானம் கடந்த மாதம் நிறைவேற்றப்பட்ட பின்னர், சில நாட்களுக்கு முன்னதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவையும், ஐ.நா.வின் வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் சந்தித்து கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net