வடமராட்சி – கொடிகாமம் வீதியில் விபத்து: 18வயது இளைஞர் பலி!
வடமராட்சி – கொடிகாமம் வீதியில் ஏற்பட்ட மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொரு இளைஞர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடமராட்சி – கொடிகாமம் வீதியில்
நேற்று இரவு 7.30 மணியளவில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டையிழந்து விபத்துள்ளாகியுள்ளது.
இதன்போது, மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற இளைஞர் படுகாயமடைந்தார். எனினும் பின்னிருக்கையில் பயணித்த இளைஞர் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்துள்ளார்.
இவ்விபத்தில் உயிரிழந்தவர் துன்னாலை வடக்கைச் சேர்ந்த கதிர்காமநாதன் கஜீபன் 18 என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதேவேளை, படுகாயமடைந்த இளைஞர் மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இவ் விபத்து தொடர்பில் நெல்லியடிப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.