கிளிநொச்சிக் குளத்தினை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை

கிளிநொச்சிக் குளத்தினை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிளிநொச்சி நகரத்தின் மையப்பகுதியில் சுற்றுலா பயணிகளை கவரக்கூடிய வகையிலும் நகருக்கான நீர்த்தேவையை பூர்த்தி செய்யும் வகையிலும் அமைந்துள்ள கிளிநொச்சிக்குளத்தின் கரையோரப்பகுதிகள் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன.

இதனால் எதிர்காலத்தில் குளம் இல்லாமல் போகின்ற நிலமை காணப்படுவதாக பல்வேறு தரப்புக்களும் சுட்டிக்காட்டியுள்ளன.

அதாவது, கிளிநொச்சி கரைச்சி, கண்டாவளை, ஆகிய பகுதிகளுக்கான குடிநீரைப்பெற்றுக்கொள்வதற்கும் எதிர்காலத்தில் பூநகரி மற்றும் தட்டுவன்கொட்டிப்பகுதிக்கான குடிநீரைப்பெற்றுக்கொள்வதற்கும் பயன்படுத்துகின்ற இக்குளத்தின் இயற்கைத்தன்மையையும் குளத்தையும் பாதுகாக்க உரிய திணைங்களங்கள் நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று மாவட்ட ஒருங்கிணைப்புக்கூட்டத்திலும் பல்வேறு தரப்புக்களாலும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதாவது, கிளிநொச்சி குளத்தினுடைய கரையோரப்பகுதிகளின் எல்லைகளை வரையறை செய்து குளத்தைப்பாதுகாக்க வேண்டும்.

அத்தோடு மண் நிரவிக்காணப்படுகின்ற குளத்தினை ஆழப்படுத்தி அதன் இயற்கைச்சூழல் பாதுகாக்கப்படவேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net