வடக்குமாகாண தொழில்துறை திணைக்களத்தின் ஏற்பாட்டில் சித்திரை புத்தாண்டு சிறப்பு சந்தை.

வடக்குமாகாண தொழில்துறை திணைக்களத்தின் ஏற்பாட்டில் சித்திரை புத்தாண்டு சிறப்பு சந்தை இன்று இடம்பெற்றது.

கரைச்சி பிரதேசத்தில் உள்ள உள்ளூர் உற்பத்தியாளர்களின் உற்பத்தி பொருட்கள் இவ்வாறு இன்று குறித்த சிறப்பு சந்தையில் வைக்கப்பட்டிருந்தது.

சித்திரை புத்தாண்டை கொண்டாடும் வகையியிலும், உள்ளூர்  உற்பத்திகளை அதிகரிக்கும் நோக்குடனும் குறித்த விற்பனை சந்தை ஏற்ப்பாடு செய்யப்பட்டிருந்தது.

கரைச்சி பிரதேச சபை வளாகத்தில் இன்று காலை 9.30 மணியளவில் குறித்த சந்தை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அ.வேழமாலிகிதன், கரைச்சி பிரதேச செயலாளர் த.முகுந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு குறித்த சிறப்பு சந்தையை ஆரம்பித்து வைத்தனர்.

Copyright © 3911 Mukadu · All rights reserved · designed by Speed IT net